நாங்க காசு இல்லாம தான் இங்க வரோமா.. ஓவரா பேசாதீங்க - கடுப்பான விஜே மணிமேகலை!
நகைக்கடை ஒன்றில் விஜே மணிமேகலையை ஒருவர் சூடாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
மணிமேகலை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மணிமேகலை. அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி தனியாக கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் கே பி ஒய் பாலாவுடன் அமெரிக்காவிலும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த மணிமேகலை மீண்டும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாகியுள்ளார். இவர் நடன கலைஞரான உசைனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் தனியாக ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர்.
சேல்ஸ் கேர்ள்
இந்நிலையில், இவர் தனது கணவருடன் ஒரு நகை கடைக்கு சென்றார். அங்கு, "இங்கே உள்ள அனைத்து நகைகளையும் எனக்கு வாங்கித் தரணும் உனக்கு ஆசை இருக்கும்" என்று கூறும்போது, ஆசை எல்லாம் யாருக்கு வேணும் முதல்ல காச கொடுத்து நகையை வாங்குங்க என பர்தா அணிந்த சேல்ஸ் கேர்ள் ஒருவர் திடீரென மணிமேகலையை தாக்கிப் பேச மணிமேகலை உடனே அவருடன் சண்டை போடுவார்.
இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது. இதற்கு ரசிகர்கள் "அந்தப் பர்தா போட்டு சண்டை போடும் சேல்ஸ் கேர்ள் நடிகை ஸ்ருதிகா தான் உங்களுக்கு தெரியாதா", "இதை போய் பிராங்க் என்று ஒரு வீடியோ வேற" எனக் கேட்டு கலாய்த்து வருகின்றனர்.