நான் செருப்பு அணிந்தால் அப்படியெல்லாம் நடக்குது...மனம்திறந்த விஜய் ஆண்டனி!
செருப்பு அணியாமல் இருப்பதற்கான காரணத்தை விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஆவார். இவர் சுக்கிரன் படத்தின் மூலம் துள்ளலான இசையை அமைத்து பிரபலமானவர். இவரது இசை ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது. நாக்கு முக்கா, ஆத்திச்சூடி, மச்சக்கன்னி, மஸ்காரா, மாக்காயேலா போன்ற பல பாடல்கள் பலரது பேவோரைட் ஆகிவிட்டது.
அதை தொடர்ந்து, நான்’ படத்தின் மூலம் நடிகராக களமிறங்கினார். பின்னர், சலீம், சைத்தான், பிச்சைக்காரன் போன்ற படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றது. நடிகராக மட்டுமல்லாம் தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராக விஜய் ஆண்டனி அசத்தி வருகிறார்.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் இவரது மகள் மீராவின் உயிரிழப்பு இவரை மிகவும் பாதித்தது. இருப்பினும், சினிமா மற்றும் கான்செர்ட்டுகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த சூழலில், விஜய் ஆண்டனி சமீப காலமாக காலில் செருப்பு அணியாமல் இருப்பது பேசுபொருளாக மாறியது.
செருப்பு
தொடர்ந்து, இசைவெளியீட்டு விழா, படத்தின் ப்ரோமோஷன் மற்றும் பல நிகழ்ச்சிகளில் அவர் காலில் செருப்பு அணியாமலேயே பங்கேற்று வருகிறார். அந்த வகையில் தராபாத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செருப்பு அணியாமல் பங்கேற்றுள்ளார். இது தொடர்பாக அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், செருப்பு அணியாமல் இருப்பது மனதுக்கு அமைதியை தருகிறது, அது உடல்நலத்திற்கும் நல்லது. மேலும், செருப்பு அணியாமல் நடப்பது நமக்குள்ளான தன்னம்பிக்கையை வளர்க்கிறது என்றார்.
மேலும், நான் எப்போது செருப்பு அணியாமல் சுற்ற ஆரம்பித்தேனோ அன்று முதல் எந்தவிதமான நெருக்கடியான சூழலும் எனக்கு வரவில்லை. வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்க விரும்புகிறேன். இது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது என்று பதிலளித்தார்.