த்ரிஷாவுடன் தனி விமானத்தில் விஜய்? எங்கே சென்றார்கள் தெரியுமா!
த்ரிஷாவுடன் தனி விமானத்தில் விஜய் சென்றதாக செய்திகள் பரவி வருகிறது.
விஜய்-த்ரிஷா
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடைபெற்றது. மேலும், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில், விசிக தலைவர் திருமாவுக்கு திமுக கொடுத்த அழுத்தம் குறித்து விஜய் பேசியது கவனம் பெற்றது.
பரவும் புகைப்படம்
சினிமாவில் இறுதியாக கோட் படத்தில் நடித்திருந்தார். மேலாக இன்னும் 1 படத்துடன் முழுநேரமாக அரசியலில் களமிறங்கவுள்ளார். இதற்கிடையில் விஜய்யும் த்ரிஷாவும் டேட்டிங் செய்து வருவதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்படுவார்கள்.
அந்த வரிசையில் இருவரும், உதவியாளர்கள் நான்கு பேரும் என மொத்த ஆறு பேர் தனி விமானத்தில் சென்னையிலிருந்து கோவாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
மேலும், டிக்கெட்டில் விஜய், திரிஷா உள்ளிட்டோரின் பெயர்கள் இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.