2வது திருமணத்திற்கு ரெடியான சமந்தா? அந்த இயக்குநர் ஏற்கனவே திருமணமானவராம்..
சமந்தா 2வது திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக தகவல் பரவி வருகிறது.
சமந்தா
நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்களுக்கு முன்பு இரண்டு பேருமே பரஸ்பர புரிதலோடு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
தொடர்ந்து மையோசிடிஸ் நோய் பாதிப்பால் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் தீவிர சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார். பின் சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் அந்த இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது.
2வது திருமணம்?
சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான 'சிட்டாடெல்' என்ற தொடரில் வருண் தவான் உடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில், பிரபல இயக்குனர் ராஜு நிடுமூருவுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இருவரும் 'ஃபேமிலி மேன்' தொடரில் இணைந்து பணியாற்றிய போது நெருக்கமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜு நிடுமூரு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பவர். முன்னதாக சமந்தா தனது இன்ஸ்டா பதிவிட்ட ஒரு பதிவில், நம்பகமான வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகள் வேண்டும் என்றும்,
தனது தொழிலில் வெற்றி பெற விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்துதான் சமந்தா இவரை திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக செய்திகள் பரவி வருகிறது.