த்ரிஷாவுடன் காதல்.. மனைவியுடன் விவாகரத்து சர்ச்சை - பதிலடி கொடுத்த விஜய்!

Vijay Trisha Chennai Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Jun 28, 2024 02:30 PM GMT
Report

சமூக வலைதளங்களில் பரவும் வதந்த்திக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பரவும் வதந்தி

கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் பெரிதாக மக்கள் மனம் கவர்ந்தவர்கள் விஜய்யும், த்ரிஷாவும் தான். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.

த்ரிஷாவுடன் காதல்.. மனைவியுடன் விவாகரத்து சர்ச்சை - பதிலடி கொடுத்த விஜய்! | Vijay About Rumour With Wife And Trisha

தற்போது இருவரும் ரகசிய உறவில் இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது. விஜய் இப்போது GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர், அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார்.

பூதாகரமாகும் விவகாரம்; த்ரிஷா-விஜய் உறவு உண்மையா? என்ன நடக்குது!

பூதாகரமாகும் விவகாரம்; த்ரிஷா-விஜய் உறவு உண்மையா? என்ன நடக்குது!

விஜய் பதிலடி

இதற்கிடையில் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யவுள்ளதாகவும், அதற்கு காரணம் த்ரிஷாவுடனான் உறவு எனவும் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது. அதற்கேற்றார் போல அண்மையில் விஜய் பிறந்தநாளுக்கு, இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றை த்ரிஷா பகிர்ந்து அதற்கு காதல் ஆங்கில பாடலை ஒலிக்க விட்டிருந்தார்.

த்ரிஷாவுடன் காதல்.. மனைவியுடன் விவாகரத்து சர்ச்சை - பதிலடி கொடுத்த விஜய்! | Vijay About Rumour With Wife And Trisha

அதுவே காட்டுத்தீ போல் பேசப்பட்டது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் ஏற்பாடு செய்திருந்த கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய விஜய், சோசியல் மீடியாவில் நல்லது, கெட்டது என்று ஒப்பீனியன் கேக்குறாங்க அதெல்லாம் பாத்தீங்கன்னா, ஒரு நல்ல விஷயத்தை கெட்டதாகவும்,

ஒரு கெட்ட விஷயத்தை நல்லதாகவும் காட்டுவதை சோசியல் மீடியா பக்கத்தில் பார்த்து இருப்போம். நீங்கள் எல்லாமே பாருங்க, எல்லாத்தையும் படிங்க ஆனால் எது உண்மை என்பது மற்றும் ஆராய்ந்து பாருங்க எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தன்னை குறித்து பரவும் வதந்திகளுக்கு பதிலடி கொடுத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.