கல்யாணம் பண்ணா இது போய்டும்? அதெல்லாம் எந்த தொடர்பும் இல்ல - நடிகர் விஜய்
திருமணம் மற்றும் சினிமா குறித்த விஜய் பேசியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான லியோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி68 GOAT திரைபடத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தளபதி 69 படத்தில் கமிட்டாகியுள்ளார். அதுதொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
திருமணம்
மேலும், அரசியலில் தீவிரமாக களமிறங்கி தனது கட்சி பெயரான தமிழக வெற்றி கழகம் என்பதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் விஜய் முன்னதாக அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், திருமணம் செய்த பிறகு அவரது மார்க்கெட் குறையுமா என்ற கேள்விக்கு, சிலர் திருமணம் செய்துகொண்டால் மார்க்கெட் போய்டும் எனக் கூறுகின்றனர்.
அதற்கும் படங்களில் நடிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. படத்தின் கதை நன்றாக இருந்தால் கண்டிப்பாக அப்படங்கள் வெற்றிபெறும். எனவே கல்யாணம் பண்ண மார்க்கெட் போய்டுமா என கேட்டால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்வேன் எனத் தெரிவித்துள்ளார்.