என் அம்மாவுக்கும், பையனுக்கும் உங்களைதான் ரொம்ப பிடிக்கும் - ஹீரோவிடம் தெரிவித்த விஜய்!
நடிகர் விஜய் தெரிவித்துள்ள கருத்து ஒன்று கவனம் பெற்று வருகிறது.
நடிகர் விஜய்
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய்யின் மாறுபட்ட நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது, லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக விஜய் தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மட்டுமே கலந்துகொண்டு பேசுகின்றார். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சுவாரஸ்ய தகவல்
இந்நிலையில், முன்னதாக சாந்தனுவின் நடிப்பில் வெளியான சித்து பிளஸ் 2 என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சந்தோஷமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் பாக்கியராஜின் இன்று போய் நாளை வா என்ற படத்தை தான் பார்ப்பேன்.
அப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் பிடிக்கும். தன் மகனுக்கும், தாய்க்கும் ஷாந்தனுவை மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
You May Like This Video