திருமணத்திற்கு பின் நயன்தாரா பிறந்தநாள் - விக்னேஷ் சிவன் பிளான் இதுதான்..!
நடிகை நயன்தாரா பிறந்தநாளுக்கு, விக்னேஷ் சிவன் பிளான் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா பிறந்தநாள்
நடிகை நயன்தாரா தனது 38வது பிறந்தநாளை வரும் 18ம் தேதி கொண்டாட உள்ளார். ஒவ்வொரு வருடமும் நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் ஸ்பெஷலாக பிறந்தநாள் பார்ட்டியை ஏற்பாடு செய்வார்.

அந்த வகையில், திருமணத்திற்குப் பிறகு தன்னுடைய குழந்தைகளுடன் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. எனவே இந்த வருட பிறந்தநாளை எப்படி கொண்டாடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீடித்து வருகிறது.
விக்கி பிளான்
இதற்கிடையில், விக்னேஷ் சிவன் பிறந்தநாளை நயன்தாரா துபாயில் கொண்டாடினார். இந்நிலையில், இப்போது குழந்தைகள் இருப்பதால் எளிமையாக பிறந்தநாளை வீட்டிலேயே நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடம் இந்த வருடம் கொண்டாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், குழந்தைகள் வளரும் வரை அதிகம் வெளியில் பயணத்திட்டங்களை இருவரும் தவிர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது, அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள உள்ளார்.
விக்னேஷ் சிவன், நடிகர் அஜித்தின் 62வது படத்திற்கான திரைக்கதை பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan