வாழ்த்துகள் தங்கமே... திருமணத்திற்கு பின் முதல் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த விக்கி!

Nayanthara Only Kollywood Vignesh Shivan Gossip Today
By Sumathi Jun 18, 2022 10:47 AM GMT
Report

காதல் மனைவி நயன்தாராவின் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

 நயன்-விக்கி

நடிகை நயன்தாராவும் இயக்கநர் விக்னேஷ் சிவனும் கடந்த 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னை மகாபலிபுத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அவர்களின் திருமணம் நடைபெற்றது.

வாழ்த்துகள் தங்கமே... திருமணத்திற்கு பின் முதல் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த விக்கி! | Vignesh Shivan Wishes Nayanthara For Her Movie

தங்களின் திருமணத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு 25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர் நயன்தாரா விக்னேஷ் சிவனும். இதனால் திருமணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

 o2 ரிலீஸ்

இருப்பினும் ரஜினிகாந்த், ஷாருக்கான், ஏஆர் ரஹ்மான், ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். திருமணம் முடிந்த கையோடு திருப்பதி ஏழுமலையான் கோவில், பிரஸ் மீட், மறுவீடு விருந்து, கேரள கோவில்களில் வழிபாடு என படு பிஸியாக உள்ளனர் புதுமண தம்பதியினர்.

இந்நிலையில் திருமணத்திற்கு  பின்  நயன்தாராவின் முதல் படமான o2 ரிலீஸ் ஆகியுள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கும் தனது மனைவிக்கும் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

வாழ்த்துகள் தங்கமே

இயக்குநர் விக்னேஷ் சிவன். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், இந்த அற்புதமான த்ரில்லர் படத்திற்க்கு வாழ்த்துக்கள்... எமோஷனல் அன்ட் எஃபெக்ட்டிவ்... உனக்கு வாழ்த்துகள் தங்கமே... என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.  

தூக்கமில்லாமல் பல இரவுகளை கழித்திருக்கிறேன் - சமந்தா வேதனை!