நாயுடன் ஒப்பிடப்பட்டாரா விக்னேஷ் சிவன் ?நயன்தாரா ஆவணப்படத்தில் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Nayanthara Viral Video Vignesh Shivan Netflix
By Vidhya Senthil Nov 20, 2024 04:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

  மனைவி நயன்தாரா உடனான உறவு குறித்து விக்னேஷ் சிவன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

 விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடி தான் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது . இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இருவரது பழக்கம் நட்பாகத் தொடங்கி காதலாக மாறியது.

nayanthara - vignesh shivan

அவ்வப்போது இது குறித்து செய்திகள் வெளியான நிலையில் தங்கள் உறவு குறித்துத் தெரிவிக்கவில்லை . இந்த சுழலில் சிங்கப்பூரில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்து கொண்டு தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக்கினர்.

விவாகரத்தை அறிவித்த ஏ.ஆர் ரஹ்மான்..அடுத்த நொடியில் கணவரை பிரிந்த பிரபல பாடகி- இதுதான் காரணமா?

விவாகரத்தை அறிவித்த ஏ.ஆர் ரஹ்மான்..அடுத்த நொடியில் கணவரை பிரிந்த பிரபல பாடகி- இதுதான் காரணமா?

அப்போது சமூகவலைத்தளங்களில் நயன்தாராவிற்குத் தகுதியற்றவர் என்றும் அவரை ஒரு 'நாய்'யுடன் ஒப்பிட்டுப் பேசினர். இதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கல்யாண வீடியோ

மேலும் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் வாழ்க்கை, ‘‘Nayanthara: Beyond the Fairytale’’ என்ற பெயரில் ஆவணப்படமாகத் தயாரானது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நயன்தாராவின் கல்யாண வீடியோ வெளியானது.

NayantharaBeyondTheFairytale

அதில் அவர்களின் உறவு தெரிந்த பிறகு பொது ட்ராவலிங் அனுபவத்தை விக்னேஷ் பகிர்ந்து கொண்டார். அவரை ஒரு நாயுடன் ஒப்பிட்டு, அவர்களின் ஒற்றுமையைக் கேலி செய்து, அவர் நயன்தாராவிற்குத் தகுதியற்றவர் என்று கூறி ஒரு மீமை அவர் குறிப்பிட்டார்.