பத்திரிக்கையாளரை தாக்கியதாக அஜித்தின் மேலாளர் மீது போலீஸில் புகார் - பரபரப்பு சம்பவம்
பத்திரிக்கையாளரை தாக்கியதாக அஜித்தின் மேலாளர் மீது போலீஸில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் செய்தியாளர் சந்திப்பில்
பிரபல நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்
விக்னேஷ் சிவன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,
எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. நானும், நடிகை நயன்தாராவும் வருகிற ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போகிறோம். எங்கள் திருமணம் முதலில் திருப்பதியில்தான் செய்யலாம் என்று முடிவு செய்தோம். ஆனால், இங்கிருந்து அவ்வளவு பேரையும் கூட்டிக்கொண்டு போவதில் கொஞ்சம் சிரமம் உள்ளது. அதேபோல் எங்கள் திருமணம் அங்கு நடைபெறுவதால் பலர் வருவதற்கும் சிரமம் ஏற்படும். ஆதலால் திருப்பதியில் திருமணம் செய்யவில்லை. சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில்தான் எங்கள் திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் முடித்துவிட்டு ஜூன் 11ம் தேதி உங்கள் அனைவரையும் வந்து சந்திக்கிறேன் என்று பேசினார்.
பத்திரிகையாளர் மீது தாக்குதல்
பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், தனியார் பத்திரிக்கை நிறுவனத்தை சேர்ந்த ஆனந்தன் என்ற நிருபர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் போட்டோ எடுக்க முயற்சி செய்தார். அந்த நேரத்தில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, நிருபர் ஆனந்தனை பார்த்து யார் நீ என்று அதட்டியுள்ளார். பதிலுக்கு அந்த நிருபரும் சுரேஷ் சந்திராவை பார்த்து நீ யார் என்று கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. பின்னர் தான் நிருபருக்கு தெரிந்தது. அவர் அஜித்தின் மேலாளர் என்று. இதனையடுத்து, சிறிது நேரம் கழித்து சுரேஷ் சந்திராவிடம் மன்னிப்பு கேட்க முயற்சி செய்தார். அப்போது, ஆனந்தனின் சுரேஷ் சந்திராவின் உதவியாளர்கள் அந்த நிருபரை தாக்கியதுடன், கழுத்தை பிடித்து வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது.
காவல் நிலையத்தில் புகார்
இந்நிலையில், இதுகுறித்து நிரூபர் ஆனந்தன், அண்ணாசாலையில் உள்ள காவல்துறையில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், செய்தி சேகரிக்கச் சென்ற தன்னிடம் சுரேஷ் சந்திரா அவதூறாக பேசியதோடு அல்லாமல், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்ற இடத்திலிருந்து அவரது உதவியாளர்கள் தன்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியுள்ளனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் தெரிவித்துள்ளார்.