நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் - முக்கிய விருந்தினருக்கு சென்ற அழைப்பிதழ் - பலத்த பாதுகாப்பு மும்முரம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் வருகிற ஜுன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இருவரும் அண்மையில் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து, நடிகை நயன்தாரா கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பபேஷ்வரர் ஆலயத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், இன்று இயக்குநரும், நடிகை நயன்தாராவின் வருங்கால கணவருமான விக்னேஷ் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், எங்கள் திருமணம் திருப்பதியில் கிடையாது. சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில்தான் எங்கள் திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் முடித்துவிட்டு ஜூன் 11ம் தேதி உங்கள் அனைவரையும் வந்து சந்திக்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், நடிகர் நயன்தாராவுக்கும் திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரிசார்ட்டில் நடக்க இருக்கிறது.
திருமண ஏற்பாடுகள்
திருமண ஏற்பாடுகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடக்க உள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு IBC Tamil
முற்றுகிறது முறுகல் : கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா IBC Tamil