செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை இயக்கும் விக்னேஷ் சிவன்-தொடர்ச்சியாக அடிக்கும் ஜாக்பாட்!
நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
விக்னேஷ் சிவன்
மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதற்கான துவக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. அந்த விழாவை தமிழ் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒருங்கிணைக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என கூறப்படுகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் இரண்டு பேரின் இசை நிகழ்ச்சியை நடத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா திரைப்பட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். அதே சமயத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் துவக்க விழாவை இயக்க தயாராகி வருகிறார்.
அதை முடித்ததும் அஜித் நடிப்பில் அவர் இயக்கும் படத்தின் வேலைகளை தொடங்குவார் என கூறப்படுகிறது.
நோயோடு போராடும் ஸ்ருதிஹாசன்... என்னாச்சு?