திரைபடத்தை தொடர்ந்து சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை இயக்கும் விக்னேஷ்..!
Government of Tamil Nadu
Vignesh Shivan
By Thahir
திரைப்படத்தை தொடர்ந்து சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட்
விரைவில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான தொடக்க விழா நிகழ்ச்சி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்கவுள்ளார்.
இதற்கான பணிகளில் விக்னேஷ் சிவன் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் பல பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாம்.
அதோடு இரண்டு முன்னணி இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அஜித்தின் 62வது பணிகளை விக்னேஷ் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.