அரசு சொத்தை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ந்த அமைச்சர் - நடந்தது என்ன?

Vignesh Shivan Puducherry Tamil Directors
By Karthikraja Dec 12, 2024 02:17 PM GMT
Report

அரசு ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன்

போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். மேலும், நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். 

vignesh shivan

பிரபல நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

வேண்டாம் என்றும் கெஞ்சினேன்; கற்பனை செய்ய முடியாத பிரச்சினை - நயன்தாரா ஓபன்டாக்

வேண்டாம் என்றும் கெஞ்சினேன்; கற்பனை செய்ய முடியாத பிரச்சினை - நயன்தாரா ஓபன்டாக்

அரசு ஹோட்டல்

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும், படங்கள் தயாரிப்பது உள்பட திரை பணிகளை தாண்டி, வேறு பிசினஸ்களையும் செய்து வருகிறார்கள். லிப் பாம், நாப்கின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதோடு 9Skin என்ற பெயரில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் நயன்தாரா நடத்தி வருகிறார்.

இந்நிலையில் புதுச்சேரிக்கு சென்ற விக்னேஷ் சிவன், புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து ஹோட்டல் தொழில் ஆரம்பிப்பது தொடர்பாக பேசினாராம். அப்போது புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் இயங்கி வரும் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள சீகல்ஸ் ஹோட்டலை விலைக்கு கேட்டாராம்.

மறுத்த அமைச்சர்

அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர், அது அரசு ஹோட்டல் அதை விற்க முடியாது என கூறியுள்ளார். அப்படியானால் சீகல்ஸ் ஓட்டலை ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்கு தருவீர்களா? என விக்னேஷ் சிவன் கேட்டுள்ளார். 

விக்னேஷ் சிவன்

'சீகல்ஸ் ஓட்டல் புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். அதனை ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடியாது' என்று அமைச்சர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை பகுதிகள் தனியார் வசம் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றாவது கிடைக்குமா? என்று கேட்டதாகவும், அதற்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு கடற்கரைகள் கடந்த 2017 ஆம் ஆண்டே டெண்டர் கோரப்பட்டு ஏலத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் எதுவும் செய்ய முடியாது என்று அமைச்சர் கூறினாராம்.

இசை நிகழ்ச்சிகள்

மேலும், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏதாவது இடம் கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். புதுச்சேரி துறைமுக வளாகத்தில். ஒரே நேரத்தில் 4,000 பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கும் வகையில் பொழுதுபோக்கு மையம் ஒன்றை கட்டியுள்ளோம்.

அதற்கு உரிய கட்டணம் செலுத்தி நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளலாம் என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார். அதன் பின்னர் துறைமுக வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு மையத்தை நேரில் சென்று பார்வையிட்ட விக்னேஷ் சிவன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.