வேண்டாம் என்றும் கெஞ்சினேன்; கற்பனை செய்ய முடியாத பிரச்சினை - நயன்தாரா ஓபன்டாக்

Nayanthara Tamil Cinema Tamil Actress
By Karthikraja Dec 12, 2024 11:00 AM GMT
Report

நான் யாருடைய பட்டத்தையும் பறிக்க நினைக்கவில்லை என நயன்தாரா பேசியுள்ளார்.

நயன்தாரா

நடிகை நயன்தாரா தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தன்னை பற்றிய பல்வேறு சர்ச்சைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

nayanthara latest

அதில் பேசிய அவர், லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய எல்லா பட தயாரிப்பாளர்களிடமும், இயக்குநர்களிடமும் அந்த பட்டம் வேண்டாம் என்று கெஞ்சியிருக்கேன். 

தற்கொலைக்கு முயன்ற என்னை காப்பாற்றியது நயன்தாராதான் - தம்பி ராமையா அதிர்ச்சி தகவல்

தற்கொலைக்கு முயன்ற என்னை காப்பாற்றியது நயன்தாராதான் - தம்பி ராமையா அதிர்ச்சி தகவல்

லேடி சூப்பர்ஸ்டார்

அந்த பட்டம் என் கேரியரரை தீர்மானிக்கக் கூடியது என நான் நினைக்கவில்லை. நான் யாருடைய பட்டத்தையும் பறிக்க நினைக்கவில்லை. ஆனால் மக்கள் என்மீது வைத்திருக்கும் அன்பு மரியாதையால் எனக்கு அந்த பட்டத்தின் மேல் மதிப்பு இருக்கிறது. 

நயன்தாரா

நான் சிறந்த நடிகையாகவோ, சிறந்த டான்ஸராக இல்லாமல் இருக்கலாம். ஆனான் நான் இங்குதான் இருக்கிறேன். என்னுடைய கடுமையான உழைப்பால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். மக்களுக்கு ஏதோ ஒன்று என்னிடம் பிடித்திருக்கிறது. மற்றபடி எனக்கு இந்த பட்டத்தின் மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை.

லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தால் ஒவ்வொரு முறையும் என்னை வைத்து ஏதாவது சர்ச்சை வரும். குறிப்பாக ஆண்களிடத்தில் இதை கவனித்திருக்கிறேன். ஒரு ஆணை விட ஒரு பெண் வெற்றிகரமாக இருந்தால் அது மற்ற ஆண்களையும் பெண்களையும் தொந்தரவு செய்கிறது" என பேசினார்.