வாடகைக்கு பாய் பிரென்ட் தேடும் பெண்கள் - என்ன காரணம் தெரியுமா?
வியட்நாமில் பல பெண்கள் வாடகைக்கு பாய் பிரென்ட் தேடி வருகின்றனர்.
திருமண அழுத்தம்
பெண்கள் திருமண வயதை தொட்டு விட்டாலே எப்போது திருமணம் என்ற கேள்விகளை பெற்றோர் முதல் உறவினர்கள் வரை கேட்க தொடங்கி விடுவர்.
திருமணத்திற்கு பின்னர் கெரியரை தொடர வாய்ப்பில்லாத பல பெண்கள் தங்கள் கெரியரை முடித்துக்கொண்டு அல்லது கெரியரை தொடங்காமலே திருமண வாழ்வில் நுழைகின்றனர்.
வாடகை பாய்பிரென்ட்
அவ்வாறு கெரியருக்கு முன்னுரிமை கொடுத்து திருமணத்தை தள்ளிப்போடும் பெண்கள், குடும்பம் மற்றும் சமூகத்திடமிருந்து பெரும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர்.
இதனை தவிர்க்க வியட்நாமை சேர்ந்த இளம் வயது பெண்கள் வாடகைக்கு பாய் பிரென்ட் வைத்து கொள்கின்றனர். குடும்ப நிகழ்வின் போது திருமணம் குறித்து எழும் கேள்விகளை தவிர்க்க, இந்த வாடகை பாய் பிரென்டை அழைத்து செல்கின்றனர்.
சில பெண்கள் இந்த வாடகை பாய் பிரென்டை வீட்டிற்க்கு அழைத்து சென்று பெற்றோருக்கு அறிமுகம் செய்கின்றனர். இதன் பிறகு பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டணம்
இதை தொழில்முறையாக செய்து வரும் ஹுய் துவான் என்ற 25 வயதை இளைஞர், இதற்காக நான் ஜிம் செல்ல வேண்டும், சமைக்க வேண்டும், பாட வேண்டும், உரையாடல் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இந்த ஒப்பந்தத்தின் படி எந்த பாலியல் ரீதியான உறவோ, உணர்வு ரீதியான உறவோ கிடையாது என தெரிவித்துள்ளார்.
2 மணி நேரம் ஷாப்பிங் வருவதற்கு 1,00,000 வியட்நாம் டாங்(இந்திய மதிப்பில் ரூ.333) வசூலிப்பதாகவும், குடும்ப நிகழ்வுக்கு வர 10,00,000 வியட்நாம் டாங் வசூலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தரத்தை உறுதிப்படுத்த, ஒரு மாதத்திற்கு மூன்று முதல் நான்கு வாடிக்கையாளர்களை மட்டுமே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது பொய் என தெரிய வரும் என நிலையில் பெற்றோரின் நம்பிக்கை முழுவதும் உடைந்து விடும். இது ஆரோக்கியமான கலாச்சாரம் இல்லை என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.