ஊழியர்கள் டேட்டிங் செய்தால் போனஸ் - வாரி வழங்கும் நிறுவனம்
டேட்டிங் செய்யும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது.
டேட்டிங் தளம்
சீனாவின் சென்சேன் மாகாணத்தில் insta360 என்ற கேமரா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்கள் டேட்டிங் செய்தால் போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.
தங்களுடைய ஊழியர்களுக்கு என பிரத்யேகமாக ஆன்லைன் டேட்டிங் தளத்தையும் உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் தங்களுடைய ஊழியர்கள் தங்களுக்கு பொருத்தமான நபர்களை தேர்வு செய்து டேட்டிங் செய்யலாம்.
போனஸ்
இந்த டேட்டிங் தளத்தில் இவர்கள் போடக்கூடிய ஒவ்வொரு பதிவுக்கும் ரூ.750 வழங்கப்படும். இருவருக்கும் பிடித்து குறைந்தது 3 மாதங்களாவது ஒன்றாக டேட்டிங் செய்தால் ஊக்கத்தொகையாக 1000 யுவன் (இந்திய மதிப்பில் ரூ.11,650) வழங்குகிறது.
தங்களது ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. திட்டம் தொடங்கிய 2 மாதத்திலே டேட்டிங் தளத்தில் 500 க்கும் மேற்பட்ட பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன. தற்போது வரை ஊழியர்களுக்கு 10,000 யுவன் (இந்திய மதிப்பில் ரூ. 1,16,667) ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனக்கு துணை தேடுவதில் என் அம்மாவை விட இந்த நிறுவனம் ஆர்வமாக உள்ளதாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த நிறுவனத்தில் எப்படி வேளைக்கு சேருவது என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். இதற்கு முன்னர் சீனா பல்கலைகழகம் ஒன்று காதலிக்க துணையை தேட ஒரு வாரம் விடுமுறை அளித்தது.