அதிர வைத்த மோசடி வழக்கு; கோடீஸ்வர பெண்ணுக்கு நீதிமன்றம் விதித்த மரண தண்டனை!

Vietnam
By Swetha Apr 12, 2024 12:30 PM GMT
Report

பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லானுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கோடீஸ்வர பெண்

வியட்நாம் நாட்டில் தற்போது ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு தொழிலதிபர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் என ஏராளமானோர் சிக்கியுள்ளனர். அந்த வகையில், அந்நாட்டை சேர்ந்த திராங் மை லானு என்ற பெண் கோடீஸ்வரர் ஆவார்.

அதிர வைத்த மோசடி வழக்கு; கோடீஸ்வர பெண்ணுக்கு நீதிமன்றம் விதித்த மரண தண்டனை! | Vietnam Billionaire Sentenced To Death

இவரது வான் தின் பாட் நிறுவனமானது உயர்தர ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை நடத்தி வருகிறது. நிதிச் சேவைகளிலும் முதலீடு செய்துள்ளது.

மரங்களில் பழங்களுக்கு பதில் கொத்து கொத்தாக தொங்கும் பாம்புகள் - நடுங்கவைக்கும் தோட்டம்..!

மரங்களில் பழங்களுக்கு பதில் கொத்து கொத்தாக தொங்கும் பாம்புகள் - நடுங்கவைக்கும் தோட்டம்..!

மோசடி வழக்கு

இந்நிலையில், சாய்கோன் கமர்ஷியல் வங்கியின் 90 சதவீத பங்குகளை வைத்திருந்த லான், போலி கடன் விண்ணப்பங்களை வைத்து வங்கியில் பணம் எடுத்ததாக குற்றச்சாட்டப்பட்டார். இதை அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருவதாகவும், இதனால் சுமார் 27 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதிர வைத்த மோசடி வழக்கு; கோடீஸ்வர பெண்ணுக்கு நீதிமன்றம் விதித்த மரண தண்டனை! | Vietnam Billionaire Sentenced To Death

நாட்டையே அதிர வைத்த இந்த மோசடி வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், லான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு நீதிபதி மரண தண்டனை வித்திதது நீதிபதிகள் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

அந்நாட்டில் மரண தண்டனை என்பது வழக்கத்திற்கு மாறாக கடுமையான தண்டனை ஆகும். வங்கி மோசடி வழக்கில் கைதான கோடீஸ்வர பெண்னான திராங் மை லானுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.