என் கண்முன்னாடியே ஆடையை கழட்டி மோசமா நடந்துகிட்டாரு - வித்யா பாலன் பகீர் தகவல்!
நடிகை வித்யா பாலன் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
வித்யா பாலன்
பெங்காலி மொழியில் ‘பலோ தேகோ’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் வித்யா பாலன்(44). இதனை தொடர்ந்து பாலிவுட் திரையுலகில், ‘பரிநீதா,’ தமிழில் ரன் படம் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
அஜித்துக்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் அசத்தலாக நடித்திருப்பார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் இவர், மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
மோசமான அனுபவம்
இந்நிலையில் இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், "நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ரயிலில் பயணித்து கொண்டு இருக்கும் போது, ஒருவர் லேடீஸ் கம்பார்ட்மென்டில் ஏறி என் கண்முன்னே சுய இன்பம் செய்தார்.
அதை பார்த்த உடன் அங்கு இருந்த பெண்கள் பயந்துவிட்டோம். பின்னர் நான் அந்த நபரை அடித்து வெளியே தள்ளினேன் எனத் தெரிவித்துள்ளார். இத்தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.