“அந்த ஒரு படம் மட்டும் ஓடாம இருந்திருந்தா நான் அவ்வளவு தான்” - பிரபல நடிகை பேச்சு
பிரபல மலையாள நடிகை தனது சினிமா வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கதாநாயகர்களையே பெரிதும் கொண்டாடும் சினிமா உலகில் கதாநாயகிகளையும் கொண்டாட வைத்த பெருமை இருவரை மட்டுமே சேரும். ஒன்று வித்யா பாலன், மற்றொன்று மஞ்சு வாரியர்.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தபோதே திருமணமாகி ஆறு ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்த மஞ்சு வாரியர் மீண்டும் நடிக்க வந்து தற்போது மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கு இணையான வளர்ச்சியைப் பெற்றுள்ளார்.
சமீபத்தில் கூட இவரது நடிப்பில் உருவாகி ஓடிடி தளத்தில் வெளியான சதுர் முகம் படம் சிறப்பான வெற்றியை மஞ்சுவுக்கு கொடுத்தது. தமிழில் தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் படத்தில் அறிமுகமாகி தனக்கென மார்க்கெட்டையும் அவர் பிடித்துள்ளார்.
இதனிடையே பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு `ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த சமயம் எனக்குள் நிறைய தயக்கங்கள் இருந்தது.
அந்த படத்தின் கதையும், படம் எடுக்கப்பட்ட விதமும்தான் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது என்றும், அந்தப் படத்தை மக்கள் ஏத்துக்காமல் இருந்திருந்தால் என் பயணம் எப்படி மாறியிருக்கும் என நினைத்தாலே திகைப்பாய் இருப்பதாக மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் ரீமேக் தான் தமிழில் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிகை ஜோதிகா ரீ-எண்ட்ரி கொடுத்த ‘36 வயதினிலே’ படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு மோசடி! குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை IBC Tamil