தேர்தலில் ஆரவாரத்துடன் களமிறங்கி காணாமல் போன வித்யா ராணி - பெற்ற வாக்குகள் தெரியுமா?
நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கிய வித்யா ராணி, தொடர்ந்து 4-வது இடத்தில் தள்ளப்பட்டுள்ளார்.
வித்யா வீரப்பன்
நாம் தமிழர் கட்சியில் முக்கியமாக கவனம் பெற்ற வேட்பாளராக இருக்கின்றார் மறைந்த வீரப்பனின் மகள் வித்யா ராணி. கிருஷ்ணகிரியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே கடும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் அதிரடியான கருத்துக்களையும் தெரிவித்து வந்தார். தேர்தலில் கணிசமான வாக்குகளை அவர் பெறுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.
தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளில் அவர் பின்தங்கியுள்ளார் வித்யா ராணி.
57652 வாக்குகளை பெற்ற அவர், 212921 வாக்குகளில் தோல்வியடைந்துள்ளார். அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கோபிநாத், 270573 பெற்று வெற்றி பெற்றுள்ளார்.