மசாஜ் சென்டர்களில் ஆபாச லீலைகள்; சிக்கிய நடிகைகளின் வீடியோ - போலீசார் விசாரணை!
மசாஜ் சென்டர்களில் ஆபாச லீலைகள் நடைபெற்று வருவதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மசாஜ் சென்டர்
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக மசாஜ் மையங்கள் வளர்ச்சி அதிகரித்துள்ளது. பெரும்பாலான மசாஜ் நிறுவனங்களில், இதற்கென பிரத்யேகமாக பயிற்சிகளை முடித்தவர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகிறார்கள். ஆனால், சில மசாஜ் நிறுவனங்கள் இந்த தொழிலை தவறாக பயன்படுத்தி வருகின்றன.
குறிப்பாக மசாஜ் என்ற பெயரில் பாலியல் சம்பவங்கள் அரங்கேறிவருவதும் தெரியவருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக ரகசியமாக மசாஜ் சென்டர்களில் போலீசார் ஆய்வு செய்து அதில் சட்ட விரோதமாக நடத்தும் சென்டர்களுக்கு சீல் வைத்து வருகிறார்கள்.
செல்போனில் தினுசாக பேசி மசாஜுக்கு அழைத்த இளம்பெண்கள்.. மயக்கத்தில் சென்ற வாலிபருக்கு நேர்ந்த கொடுமை!
ஆபாச லீலை
அந்த வகையில், சென்னையில் உள்ள கோயம்பேடு, திருமங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 50-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களை போலீசார் சோதனை நடத்தி வீடியோ பதிவுகளை கைப்பற்றியுள்ளனர். அதில் சினிமா துணை நடிகைகள், குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த விடீயோக்களில் உள்ள துணை நடிகைகள் பகுதி நேரமாக அங்கு பணியாற்றியுள்ளனர். அதேபோல குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்தமாதிரியான சென்டர்களில் இளைஞர்களுக்கு ஆசை வார்த்தை நிரம்பிய குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்துள்ளனர்.
அதில், "அழகான பெண்கள் உங்களுக்கு மசாஜ் செய்ய காத்திருக்கிறார்கள். விரைந்து வரவும்" என்றும், "சலுகை விலையில் நிறைவான மசாஜ்" வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்கள். இளைஞர்களை மயக்கும் வகையில் "கை மசாஜ்" தொடங்கி "உதட்டு மசாஜ்" வரை ஆபாச லீலைகள் செய்து பணத்தை கறக்கின்றனர் என எழுந்த புகாரின்படி போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபடுகின்றனர்.