நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற பிரபல டாக்டர் - மனதை கலங்கடிக்கும் வீடியோ!

Viral Video Rajasthan Crime
By Sumathi Sep 19, 2022 06:35 AM GMT
Report

டாக்டர் ஒருவர் தனது காரில் நாயை கட்டி இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி கண்டனங்கள் வலுத்து வருகிறது.

பிரபல மருத்துவர்

ராஜஸ்தான், ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஜ்னீஷ் கால்வா(37). இவர் அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் முதன்மையாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார்.

நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற பிரபல டாக்டர் - மனதை கலங்கடிக்கும் வீடியோ! | Video Shows Dog Tied To A Car Being Dragged

இந்நிலையில், இவர் தனது காரில் நாயை கயிறு கட்டி, அதனை தனது வாகனத்திற்கு பின்னால் ஓடி வர வைத்துவிட்டு காரை ஓட்டிச்செல்கிறார். அந்த நாய் பலவீனமாக அங்கும் இங்கும் தடுமாறி தவித்துள்ளது. வாகன ஓட்டிகளுக்கும் இது இடையூறாக இருந்துள்ளது.

அவதிக்குள்ளான நாய்

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நாயை அவிழ்த்து விடுமாறு கூறியுள்ளனர். இதனைக் கண்டுகொள்லாமல் இருந்துள்ளார் அந்த டாக்டர். இதுகுறித்த காட்சிகள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து, விலங்குகளுக்காக பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. உடனே மருத்துவர் அவர்களுடனும் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து உள்ளூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வீடியோ வைரல்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களின் உதவியுடன், டாக்டரிடம் இருந்து நாயை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த அபர்ணா என்னும் பெண், மருத்துவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ​​அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.