முடியை வெட்டி திருநங்கைகளுக்கு காட்டுக்குள் கொடூரம் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Thoothukudi Viral Video Crime Transgender
By Sumathi Oct 13, 2022 07:04 AM GMT
Report

திருநங்கைகளை அடித்தும், முடியை வெட்டியும் கொடுமை படுத்திய இளைஞர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்கள் கொடுமை

தூத்துக்குடி, கழுகுமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் இளைஞர்கள். அவர்கள் இரண்டு திருநங்கைகளை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதில் ஒரு திருநங்கையின் முடியை வெட்டி அவரை தரக்குறைவாக பேசியுள்ளனர்.

முடியை வெட்டி திருநங்கைகளுக்கு காட்டுக்குள் கொடூரம் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்! | Video Of Thrashing Transgender Women In Tuticorin

அதோடு, அதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து அந்த வீடியோவால் கண்டனங்கள் பல எழுந்தன. இந்நிலையில், சமூக ஆர்வலரும் முதல் திருநங்கை பொறியாளருமான கிரேஸ் பானு என்பவர் தான் முதலில் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து தமிழக போலீஸை டேக் செய்திருந்தார்.

 அதிர்ச்சி வீடியோ

அதன்தொடர்ச்சியாக திருநங்கையை தாக்கியும், முடிவை வெட்டியும் கொடுமைப்படுத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட திருநங்கைகளையும் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து பெண்களும் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

கழுகுமலையில் திருநங்கை ஒருவர் மீது நடத்தப்பட்ட வன்முறை வீடியோ மிகவும் வருந்தும் வகையில் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருந்த தமிழக போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.