போட்டியில் புகைப்பிடித்த வீரர் - பாகிஸ்தான் 'Smoking' லீக் என விமர்சிக்கும் ரசிகர்கள்!
முல்தான் சுல்தான் அணியை சேர்ந்த இமாத் வாசிம் செய்த செயலால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இமாத் வாசிம்
பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட்- முல்தான் சுல்தான் அணிகள் நேற்று மோதின. இதில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சேஸிங் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த போட்டியின் போது முல்தான் சுல்தான் அணியை சேர்ந்த இமாத் வாசிம் செய்த செயலால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். அந்த அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, வீரர்கள் அறையில் இமாத் வாசிம் அமர்ந்திருந்தார்.
ரசிகர்கள் விமர்சனம்
அப்போது அவர் தன்னை யாரும் பார்க்கவில்லை என நினைத்து புகைபிடித்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை பார்த்த ரசிகர்கள், போட்டி நடந்து கொண்டிருக்கும்போது ஒரு வீரர் இவ்வாறு செய்யலாமா? என விமர்சித்து வருகின்றனர்.
மேலும், இது பாகிஸ்தான் சூப்பர் லீக் இல்லை. பாகிஸ்தான் "Smoking" லீக் எனவும் பதிவிட்டு வருகின்றனர். இந்த போட்டியில் இமாத் வாசிம் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
PAKISTAN "SMOKING" LEAGUE ???#HBLPSL9 #HBLPSLFinal pic.twitter.com/pwpaj4bLh8
— Farid Khan (@_FaridKhan) March 18, 2024