குழந்தையை கொதிக்கும் பாலில் மூழ்கடித்த சாமியார்; பதற வைக்கும் வீடியோ
கொதிக்கும் பாலில் குழந்தையை மூழ்கடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மூடநம்பிக்கை
இந்தியாவில் மூடநம்பிக்கையில் பல்வேறு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தொழில்நுட்பமும் அறிவியலும் வளர்ந்துள்ள இந்த காலத்திலும் தொடர்ந்து நடைபெறு வருகிறது. இதில் சில சமயம் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இந்நிலையில், மதச்சடங்கு ஒன்றில் கொதிக்கும் பாலில் குழந்தையை சாமியார் ஒருவர் மூழ்க வைத்த பதற வைக்கும் வீடியோ இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
கொதிக்கும் பால்
இந்த வீடியோவில் உத்திரபிரதேச மாநில பலியா மாவட்டத்தில் உள்ள ஷ்ரவன்பூர் கிராமத்தில் நடந்த மதச்சடங்கு ஒன்று நடைபெறுள்ளது. இதில் திறந்த வெளியில் பால் ஒரு பானையில் கொதித்து கொண்டுள்ளது. அப்பொழுது சாமியார் குழந்தையை அந்த கொதிக்கும் பால் உள்ள பானையில் மூழ்க வைக்கிறார். அதன் பின் அந்த பானையை தூக்கி பாலை தன் மீதும் குழந்தை மீதும் ஊற்றுகிறார். இதனால் அந்த குழந்தை கதறி அழுகிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் அதைப் பார்த்த வழக்கறிஞர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.