கூட்டு பாலியல் வன்கொடுமை - ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக 2 கி.மீ நடந்து சென்ற சிறுமி!

Sexual harassment Uttar Pradesh Child Abuse Crime
By Sumathi 1 வாரம் முன்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி நிர்வாணமாக சாலையில் நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

உத்தரப் பிரதேசம், மொராதாபாத் பரெய்லியை சேர்ந்தவர் 15 வயதான சிறுமி. இவர் பக்கத்து கிராமத்தில் நடந்த திருவிழாவுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த 5 பேர்கொண்ட கும்பல் சிறுமியை இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்று மறைவான பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை - ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக 2 கி.மீ நடந்து சென்ற சிறுமி! | Video Goes Viral Online Bleeding Girl Walks

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு யாரோ வருவதை போல உணர்ந்த கும்பல் சிறுமியின் ஆடைகளை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளது. அதனையடுத்து சிறுமி நிர்வாணமாகவே மொராதாபாத் - தகுருத்வாரா சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் வரை நடந்து வந்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சிறுமி

அப்போது அவ்வழியே சென்றவர்கள் யாரும் சிறுமிக்கு உதவவில்லை. மாறாக சிறுமியை செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் வைரல் செய்துள்ளனர். இதனைக் கண்ட பெற்றோர் அலறி துடித்துள்ளனர்.

நடந்தவற்றை சிறுமி கூறியுள்ளார். தொடர்ந்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டவே, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், மற்ற நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.