பையன் கேக்கும் போது...கண்ணு கலங்கிடுச்சு..!!விசித்ரா விஷயம்...எமோஷனலான கணவர்

Kamal Haasan Bigg Boss Vichithra
By Karthick Nov 28, 2023 06:01 PM GMT
Report

விசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்த செய்தி குறித்து அவரின் கணவர் பேட்டி ஒன்றில் தனது கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

நடிகை விசித்ரா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ல் நடிகை விசித்ரா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். ஆரம்ப காலத்தில் துணை நடிகையாக இருந்த விசித்ரா கதாநாயகி, வில்லி, டான்சர், நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர்.

vichithra-husband-interview-aboutl-harassment

தற்போது பிக்பாஸில் பங்கேற்றுள்ள இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவருக்கு பல ரசிகர்களும் உள்ளனர். இந்நிலையில் விசித்ரா, சினிமாவில் நடிக்கும்போது தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பிக்பாஸில் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பகிர் செய்தி

அவர் கூறியதாவது "2001 ஆம் ஆண்டு படத்தின் ஹீரோ தன்னை ரூமுக்கு அழைத்துச் செல்லாத காரணத்தினால் டார்ச்சர் செய்ததாகவும், ஒரு நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், ஸ்டண்ட் மாஸ்டரிடம் அதைப் பற்றி கூறியபோது எதுவுமே கேட்காமல் அவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாகவும்" தெரிவித்தார்.

அக்‌ஷயாவுக்கு தினமும் ரத்தம் எடுத்து.. கருணை கொலை நிலைமையில் அவர் - கானா பாலா!

அக்‌ஷயாவுக்கு தினமும் ரத்தம் எடுத்து.. கருணை கொலை நிலைமையில் அவர் - கானா பாலா!

விசித்ராவின் இந்த கருத்துக்கள் பெரும் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து விசித்ராவின் கணவர் தனியார் யூடியூப் பக்கத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், விசித்ரா இவ்வாறு கூறிய பிறகு, கமல் சார் தனக்கு போன் செய்து பேசியதாக குறிப்பிட்டு ,அந்த விஷயத்தில் பல வில்லன்கள் இருந்தார்கள் என்றும் ஆனால் தான் அதில் ஹீரோ என்று கமல் சொன்னதாக அவர் குறிப்பிட்டார்.

பேசும் போதே அழுத்திடுவா..!

கமல் சொல்லும் பொழுது, தனக்கு கண்ணீர் வந்துவிட்டதாக கூறி, உண்மையில் அந்த விஷயம் குறித்து தாங்கள் வீட்டில் பேசியதே இல்லை என கூறினார். இந்த விஷயம் தங்களின் மூத்த மகனுக்கு அதிர்ச்சியாக இருந்தது எனசுட்டிக்காட்டி , இதன் காரணமாக அதிர்ந்து போன தங்கள் மகன், ஒரு நாள் கல்லூரிக்கு கூட செல்லவில்லை என்றார்.

vichithra-husband-interview-aboutl-harassment

மேலும் அந்த பேட்டியில், இந்த விஷயத்தை நாமே குழந்தைகளிடம் சொல்லலாம் என்று தான் பலமுறை நினைத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு,வெளியில் இருந்து யாரோ ஒருவர் இதை சொல்லும் பட்சத்தில், அதை இவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது நமக்கு தெரியாது என கூறி, ஆனால் விஷயம் தெரிந்த பிறகு மகன் ஏன் இது குறித்து சொல்லவில்லை என்று கேட்டதாக தெரிவித்தார்.இதையெல்லாம் எதற்கு சொல்ல வேண்டும் என்று நினைததாக மகனிடம் கூறியதாக குறிப்பிட்ட அவர், இத்யு குறித்து பேசினாலே விசித்ராவிற்கு கண் கலங்கும் என்றும் சமாளித்ததாக கூறினார்.