அவர் மேல நிறைய மரியாதை இருக்கு - ஆனா கவுண்டமணி அன்னைக்கு ..? விசித்ரா வெளிப்படை
நடிகர் கவுண்டமணி குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை விசித்ரா.
விசித்ரா
1992-ஆம் ஆண்டு வெளியான "அவள் ஒரு வசந்தம்" திரைப்படத்தின் மூலம் தமிழில் திரையில் அறிமுகமானவர் நடிகை விசித்ரா. தொடர்ந்து படங்களில் காமெடி கலந்த கவர்ச்சி பாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
குறிப்பாக, சின்னதாயே, தலைவாசல், தேவர்மகன், அமராவதி, சபாஷ் பாபு, எங்கள் முதலாளி, ஜாதி மல்லி போன்ற படங்களில் விசித்ரா கவனம் பெற்றார். சிறிது காலத்தில் திருமணமாகி திரையில் இருந்து ஒதுங்கிய விசித்ரா, கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.
அந்த போட்டியில் அவர் வெல்லவில்லை என்றாலும், அவரின் குணாதிசியங்களை பலரை கவர்ந்தது. இவர் தனக்கு நடிகர் கவுண்டமணியுடன் ஏற்பட்ட அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கவுண்டமணி
அப்பேட்டியில், பெரிய குடும்பம் திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார். அந்த படத்தின் பூஜையிலும் கலந்துகொண்டபோது, கே.எஸ். ரவிக்குமார் என்னிடம் கவுண்டமணி சாருக்கு ஒரு வணக்கம் சொல்ல வேண்டும் என்றார்.
அதற்கு நான் எதற்காக சார் என கேட்ட நிலையில், கே.எஸ்.ரவிக்குமார், "இல்ல வந்து ஒரு வணக்கம் மட்டும் சொல்லு" என கூறி அழைத்து சென்று வணக்கம் சொல்ல சொன்னார்.நானும் வணக்கம் என்றேன்.
அதனை கேட்ட அதைக் கேட்ட கவுண்டமணி இப்போது தான் வணக்கம் சொல்லுவீங்களா? என்று கேட்டார் என குறிப்பிட்ட விசித்ரா, அவர் ஏன் அப்படி பேசினார்? என்று இன்று வரை தனக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.