குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - முதல் ஆளாக வாக்களித்த பிரதமர்!

Indian National Congress BJP Narendra Modi India
By Sumathi Aug 06, 2022 05:52 AM GMT
Report

இன்று நடைபெற்று கொண்டிருக்கும் குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் பிரதமர் மோடி முதல் ஆளாக சென்று வாக்களித்தார்.

 குடியரசுத் துணை தலைவர் தேர்தல்

நாட்டின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களை ஆகிய இரு அவைகளின் உறுப்பினர்களும் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - முதல் ஆளாக வாக்களித்த பிரதமர்! | Vice Presidential Election 2022 Pm Modi

நியமன உறுப்பினர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்கலாம். இரு அவைகளையும் சேர்த்து மொத்தம் 788 உறுப்பினர்கள் உள்ளனர். அனைத்து எம்பிக்களின் வாக்குகளுக்கும் ஒரே மதிப்பு தான் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜக்தீப் தங்கர்

அதேபோல், இந்த தேர்தலில் கட்சி கொறடா உத்தரவு ஏதும் இல்லை என்பதால், உறுப்பினர்கள் கட்சி ஆதரவு நிலைப்பாடுகளுக்கு கட்டுப்படாமல் தங்கள் விருப்பம் போல வாக்கு செலுத்தலாம். தற்போதைய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில்,

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஜக்தீப் தங்கரை வேட்பாளராக அறிவித்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் 80 வயதான மார்கரெட் ஆல்வா வேட்பாளாரக நிறுத்தப்பட்டுள்ளார்.

 மார்கரெட் ஆல்வா

இவருக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதாதளம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஜார்கண்ட் முக்தி மோர்சா ஆகிய கட்சிகளின் ஆதரவு உள்ளன.

இருப்பினும் எண்ணிக்கை பெரும்பான்மை படி, பாஜக கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு தேவையான 515 வாக்குகளை எளிதில் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

மாலை வாக்குப்பதிவு முடிந்த உடனே தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணிக்கையை தொடங்கி உடனே முடிவுகளை வெளியிடுவார்.