கார் விபத்தில் சிக்கிய வெற்றிமாறனின் துணை இயக்குனர் - பரிதாபமாக பலியான சோகம்!

Vetrimaaran Accident Death
By Vinothini Jun 09, 2023 08:51 AM GMT
Report

இயக்குனர் வெற்றிமாறனின் துணை இயக்குனர் மற்றும் துணை நடிகர் கார் விபத்தில் சிக்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துணை இயக்குனர்

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றி வந்த சரண்ராஜ். வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக ஒரு சில காட்சியில் நடித்துள்ளார்.

vetrimaran-assistant-director-dead-in-car-accident

இவர் மதுரவாயல் தனலட்சுமி தெருவை சேர்ந்தவர், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில், கே.கே.நகர், ஆற்காடு சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது,​​பின்னால் அதி வேகமாக வந்த கார் சரண்ராஜ் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து

இந்நிலையில், கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சரண்ராஜ், தலையில் பலத்த காரம் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், இது போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

vetrimaran-assistant-director-dead-in-car-accident

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் விபத்து ஏற்படுத்திய நபர் சாலிகிராமம் எம்.சி. அவென்யூ பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்றும், அவரும் ஒரு துணை நடிகர் என்றும் தெரியவந்தள்ளது.

பின்னர், அவர் குடிபோதையில் வந்து விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது, போலீசார் இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.