பிரபல நடிகர் கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு - சோகத்தில் திரையுலகம்!

Kerala Actors Accident
By Vinothini Jun 05, 2023 01:38 PM GMT
Report

 கார் விபத்திற்குள்ளாகி பிரபல நடிகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகர்

கேரளா மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்தவர் சுதி, இவருக்கு தற்போது 39 வயது. இவர் முதலில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக அறிமுகமானார்.

actor-kollam-sudhi-dead-in-car-accident

பின்னர், 2015-ல் இயக்குனர் அஜ்மல் இயக்கிய கந்தாரி திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

தொடர்ந்து இவர், இவர் கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன், குட்டநாடன் மர்ப்பப்பா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

கார் விபத்து

இந்நிலையில், இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கைபமங்கலம் என்ற பகுதிக்கு அருகில் வந்து கொண்டிருந்தார்.

actor-kollam-sudhi-dead-in-car-accident

அப்பொழுது அதிகாலை ஒரு 4.30 மணியளவில் இவரது கார் ஒரு சரக்கு வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானது.

அந்த காரில் இவருடன் பயணித்த மிமிக்ரி கலைஞர்கள் பினு அடிமாலு, உல்லாஸ், மகேஷ் ஆகியோர் காயமடைந்தனர்.

இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து, இவரின் மரணத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார் மற்றும் பல திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.