அம்பேத்கர் குறித்து அமித்ஷா அவதூறு கருத்து.. இயக்குனர் வெற்றிமாறன் கூறியது என்ன?
அமித்ஷா அவதூறு கருத்து குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.
அமித்ஷா பேச்சு
நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இந்திய அரசியலமைப்பு மீதான சிறப்பு விவாதம் இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது.
இந்த விவாதத்தின் போது ராஜ்யசபாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர், என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக, கடவுளின் பெயரை 7 முறை சொல்லியிருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்த விடுதலை முதல் பாகம் பெரும் வெற்றியடைந்த நிலையில்,
வெற்றிமாறன்
சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ள விடுதலை இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் 'விடுதலை-2' திரைப்படத்தைக் காண
சென்னை காசி திரையரங்கிற்கு இயக்குநர் வெற்றிமாறன் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்கள் அமித் ஷா அம்பேத்கர் குறித்து பேசியது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வெற்றிமாறன், அவர் பேசியது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.