ராகுல் காந்தி தள்ளி விட்டார்; பாஜக எம்பி மண்டை உடைப்பு - நாடாளுமன்றத்தில் பரபரப்பு
ராகுல் காந்தி எம்பி ஒருவரை என் மீது தள்ளி விட்டதாக பாஜக எம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமித்ஷா பேச்சு
நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இந்திய அரசியலமைப்பு மீதான சிறப்பு விவாதம் இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது.
இந்த விவாதத்தின் போது ராஜ்யசபாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர், என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக, கடவுளின் பெயரை 7 முறை சொல்லியிருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என கூறினார்.
எம்.பி காயம்
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் முடக்கியுள்ளனர். இதனால் மதியம் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது அதே இடத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அம்பேத்கரை அவமதித்தாக கூறி பாஜக எம்பிக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
BJP MP Pratap Chandra Sarangi has gotten injured after Rahul Gandhi allegedly pushed another MP on him. He has suffered head injuries.
— Priti Gandhi (@MrsGandhi) December 19, 2024
How much lower will the opposition stoop??#CongressInsultsAmbedkar pic.twitter.com/TPGx8ZNwOL
ஒரே இடத்தில் இரு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் வழிகிறது. "நான் படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே இருந்த ராகுல் காந்தி, எம்பி ஒருவரை என் மீது தள்ளி விட்டார்" என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.