பிரபல பழம்பெரும் நடிகர் காலமானார் - சோகத்தில் திரையுலகம்!
Hollywood
By Sumathi
பிரபலமான பழம்பெரும் நடிகர் பேரி நியூமன் காலமானார்.
பேரி நியூமன்
வானிஷிங் பாயிண்ட் என்ற கல்ட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தில் நடித்தவர் பேரி நியூமன்(92). அதில், முன்னாள் ரேஸ் கார் டிரைவர் கோவால்ஸ்கியாக நடித்தார்.
தொடர்ந்து, 2007-இல் நியூமன் குரல்வளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதன்பின் சினிமா வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில், நியூயார்க்-பிரஸ்பைடிரியன் கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையத்தில் வயது மூப்பு காலமானார். இவரது மறைவிற்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.