இந்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா? - அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி

By Nandhini Sep 17, 2022 12:26 PM GMT
Report

அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி போராடி வருகிறார். 

பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி

அந்த காலத்தில் கவர்ச்சி உடைகள் அணிந்து, தன் அழகால் ரசிகர்களை வசீகரித்தவர்தான் நடிகை ஜெய்குமாரி. இவர் தமிழில் நூற்றுக்கு நூறு, எங்கிருந்தோ வந்தாள், வைரம், ரிக்‌ஷாக்காரன், தேடி வந்த லக்ஷ்மி, மாணிக்கத் தொட்டில், இவள் ஒரு சீதை, பிஞ்சு மனம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்குத் திரைப்படங்களில் பல படங்களில் டான்ஸ்ராக நடித்துள்ளார். தற்போது நடிகை ஜெயக்குமாரி மிகுந்த வறுமையில் வாடுகிறார். நடிகை ஜெயக்குமாரிக்கு 70 வயதிற்கு மேலாகிறது. ஒரு சின்ன வாடகை வீட்டில் தன் மகனுடன் வசித்து வருகிறார்.

நடிகை ஜெயக்குமாரி பேட்டி 

சமீபத்தில் ஒரு சேனலுக்கு நடிகை ஜெயக்குமாரி பேட்டி கொடுத்தார்.

அந்த பேட்டியில் -

நான் நடித்து சம்பாதித்த பணத்தில் என் 2 தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்தேன். ஆனால் யாரும் இப்போது எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை. என்னுடைய 25 வயதில் அப்துல்லா என்பவரை காதல் திருமணம் செய்தேன். எங்களுக்கு சஜிதா, பானு என்ற 2 மகள்களும், ரோஷன் என்ற ஒரு மகனும் பிறந்தனர்.

என் கணவர் இறந்த பிறகு, என் வாழ்க்கை சோதனைக்குள்ளாகிவிட்டது. கணவருக்கு சொந்தமான பெரிய வீட்டை கடனுக்காக எடுத்துக் கொண்டார்கள். நான் வைத்திருந்த கார்களை விற்று என்னுடைய இரண்டாவது மகள் பானுவுக்கு திருமணம் செய்து வைத்தேன். 2 மகள்களும் என்னை இப்போதுவரை கவனிக்கவும் இல்லை. எந்த உதவியும் செய்யவில்லை. நானும் என் மகனும் வேளச்சேரியில் உள்ள ரூ. 750க்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் என்று கூறியிருந்தார்.

actress-jayakumari

உயிருக்கு போராடும் நடிகை ஜெயக்குமாரி

இந்நிலையில், தற்போது நடிகை ஜெயக்குமாரிக்கு 2 சிறுநீரகங்களும் செயலிழந்து அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

நெட்டிசன்கள் கோரிக்கை

தற்போது அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், உயிருக்கு போராடி வரும் ஜெயக்குமாரியின் நிலையை அறிந்து நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் அவருக்கு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.