தெலுங்கானா தேர்தல் - முன்னாள், இந்நாள் முதல்வர்களை தோற்கடித்த பாஜக தலைவர்!

Telangana K. Chandrashekar Rao Election
By Karthick Dec 04, 2023 05:42 AM GMT
Report

வெளியான தெலுங்கானா தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.

வெங்கட் ரமண ரெட்டி

தென்னிந்தியாவில் பாஜக கால்பதிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் கர்நாடகத்தை தவிர அக்கட்சியால் பெரிய தாக்கத்தை வேறு எந்த தென்மாவட்டத்திலும் ஏற்படுத்த முடியவில்லை. வெளியான தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ள நிலையில், 8 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது.

venkataramanareddy-who-defeated-kcr-revanthreddy

இதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர் வெங்கட் ரமண ரெட்டி. தற்போது அம்மாநிலத்தில் முதல்வராகவுள்ள ரேவந்த் ரெட்டி மற்றும் முன்னாள் முதல்வர் கே.சி.ஆர் இருவரும் ஒரே தொகுதியில் காமரெட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டனர்.

4 மாநில தேர்தல் முடிவுகள்..?சரிகிறதா இந்தியா கூட்டணி - முந்தும் பாஜக..?

4 மாநில தேர்தல் முடிவுகள்..?சரிகிறதா இந்தியா கூட்டணி - முந்தும் பாஜக..?

இத்தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக களமிறங்கினார் வெங்கட் ரமண ரெட்டி. இரண்டு பெரிய தலைகளை எதிர்கொண்ட அவர், கே.சி.ஆரை விட 6741 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார். இரண்டு பெரும் சக்திகளை தோற்கடித்ததன் மூலம் வெங்கட் ரமண ரெட்டி புதிய சக்தியாக தெலுங்கானா மாநில அரசியலில் உருப்பெற்றுள்ளார்.

venkataramanareddy-who-defeated-kcr-revanthreddy

அவரை குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், I.N.D.I கூட்டணியில் உள்ளவர்களுக்கு. தோல்வியை லாவகமாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத, வடக்கு-தெற்குப் பிரிவினையைப் பிரச்சாரம் செய்வதில் மும்முரமாக இருக்கும் கூட்டணி, தயவு செய்து திரு கட்டிப்பள்ளி வெங்கட் ரமண ரெட்டி காருவைச் சந்திக்கவும்.


காமரெட்டி தொகுதியின் பாஜக வேட்பாளர் திரு கட்டிப்பள்ளி வெங்கட் ரமண ரெட்டி, தெலுங்கானாவில் தற்போதைய முதல்வர் திரு கே சந்திரசேகர் ராவ் மற்றும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் திரு ரேவந்த் ரெட்டி ஆகியோரை தோற்கடித்தார்.