சென்னை 28 படத்தில் நடிக்க அஜித் வாய்ப்பு கேட்டார் - மனம் திறந்த வெங்கட் பிரபு
சென்னை 28 படத்தில் நடிக்க அஜித் வாய்ப்பு கேட்டதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு
சென்னை 600028 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் வெங்கட் பிரபு. அதன் பிறகு பல்வேறு வெற்றி படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.
சமீபத்தில், விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அஜித்
நடிகர் அஜித்குமாரின் 50வது படமான மங்காத்தாவை மிக பெரும் வெற்றிப்படமாக கொடுத்த வெங்கட்பிரபு அடுத்து எப்போது அஜித்துடன் இணைவார் என ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சமீபத்தில் வெங்கட் பிரபு அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித்குமார் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதில் பேசிய அவர், "ஜீ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளதால் அவரை எனக்கே முன்னரே தெரியும்.
சென்னை 28 படம் வெளியாகும் முன்பு, நண்பர் ஒருவரின் செல்போனில் என்னை அழைத்த அஜித் வேறு குரல் மாற்றி பேசி கலாய்த்தார். அப்போது நான் நன்றாக கிரிக்கெட் விளையாடுவேன். எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என கேட்டார். பின்னர்தான் அது அஜித் என தெரிய வந்தது" என பேசினார்.