அஜித் என் மேல் கோபமாக இருப்பார் - மனம் திறந்த வெங்கட் பிரபு

Ajith Kumar Tamil Cinema Venkat Prabhu Tamil Actors Tamil Directors
By Karthikraja Dec 22, 2024 04:00 PM GMT
Karthikraja

Karthikraja

in சினிமா
Report

அஜித்தை வைத்து படம் இயக்க காத்திருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு

சென்னை 600028 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் வெங்கட் பிரபு. அதன் பிறகு பல்வேறு வெற்றி படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.

venkat prabhu

சமீபத்தில், விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அஜித் கோபம்

வெங்கட்பிரபு நடிகர் அஜித்குமாரின் 50வது படமான மங்காத்தாவை மிக பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. மீண்டும் வெங்கட்பிரபு - அஜித் கூட்டணி எப்போது உருவாகும் என ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித்குமார் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

ajith venkat prabhu

இதில் பேசிய அவர், மங்காத்தா படத்துக்கு பின்னர் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு சிலமுறை கிடைத்ததாகவும், ஆனால் வேறு படங்களை இயக்கி கொண்டிருந்தால் அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை தவற விட்டதாகவும், இதனால் அஜித் தன் மீது கோபத்தில் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் அஜித்தை வைத்து படம் இயக்க காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அஜித்குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.