GOAT படம் இப்படி இருக்க வேண்டும் - வெங்கட் பிரபுவிடம் அஜித் சொன்ன விஷயம்
GOAT படம் குறித்து நடிகர் அஜித் சொன்ன தகவல்களை வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.
GOAT
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள GOAT படம் வரும் செப்டம்பர் 5 ம் தேதி திரைக்கு வர உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படத்தின் ரிலீசுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, GOAT படம் பற்றி பேட்டி அளித்துள்ளார்.
மங்காத்தா
இதில், மங்காத்தா படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே, விஜய்யை வச்சுப் படம் பண்ணு, ரொம்ப நல்லா இருக்கும் என்று அஜித் சார் கூறினார். GOAT படம் நான் பண்றேன்னு சொன்னதும், 'என்னய்யா, எத்தனை வருஷமா நான் சொல்லிட்டிருக்கேன், சூப்பர் அருமையா பண்ணு என்று சொன்னார்.

மேலும், சில நாட்களுக்கு முன், அஜித்துக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது அவரை சந்திக்க வெங்கட் பிரபு சென்றார். அப்போது, அஜித் அண்ணாவை பார்க்க போறேன்னு என விஜய்யிடம் கூறிய போது, போன் போட்டுக் கொடு என விஜய் சொன்னார். போன் போட்டுக்கொடுத்த போது ரெண்டு பேரும் இயல்பாக பேசினார்கள்.
படம் ஆரம்பிக்கும் போதே மங்காத்தாவை விட 100 மடங்கு இருக்கணும் அப்படி பன்னு என அஜித் சார் சொன்னார். அஜித் சார் சொன்ன மாதிரி தான் செய்திருக்கிறேன். மக்கள் தான் எத்தனை மடங்கு என சொல்ல வேண்டும். விஜய்யின் சினிமா பயணத்திற்கு Farewell மாதிரி இந்த கோட் படம் இருக்கும். படம் விஜய் சாருக்கு ரொம்ப பிடித்து உள்ளது என தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan