விஜய் கட்சியில் இணைய உள்ள கீர்த்தி சுரேஷ்? - அவரே சொன்ன தகவல்
விஜய்யின் தவெக கட்சியில் இணைவது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.
விஜய் கட்சி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
தற்போது கோட் என்னும் படத்தில் நடித்து வரும் நிலையில் இதற்கு அடுத்ததாக ஒரு படம் நடித்த பின் சினிமாவுக்கு ஓய்வளித்து விட்டு முழு நேர அரசியலில் இறங்க உள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ரிவால்வர் ரீட்டா படம் நடித்துக்கொண்டிருந்த போது அங்கு பக்கத்திலேயே விஜய் சாரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அப்பொழுது விஜய் சாரை சந்தித்தேன். அந்த நேரத்தில் தான் விஜயின் அரசியல் குறித்த அறிவிப்பு வந்தது. அப்பொழுது சாரிடம், ரொம்ப சந்தோசமா இருக்கு. நானும், கட்சியில் உறுப்பினர் ஆகி விடுகிறேன் என சொன்னேன். அதற்கு அவர் சிரித்தார்.
கடைசி படம் பற்றிய தகவல் வெளிவந்திருந்தது. எப்படி சார் உணர்கிறீர்கள் என கேட்டேன். கடைசி படம்னு சொல்லும் போது ஒரு மாதிரி இருந்தது. ஆனால் சந்தோஷம் தான் என்று சொன்னார். கட்சி பெயர் நல்லா இருக்கு எனக்கு ஒரு சீட் கொடுங்க சார் என கேட்டேன். என்று கூறியுள்ளார்.

Optical illusion: துல்லியமான கண்பார்வைக்கு Test... இதில் “975” களில் இருக்கும் “973” எங்கே? Manithan

யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த கர்ப்பிணி அரச அதிகாரி: கணவர் ஐந்து மாதங்களின் பின் அதிரடி கைது IBC Tamil
