Tuesday, Jul 15, 2025

உலக பணக்காரர் ஜெஃப் திருமணத்துக்கு மக்கள் எதிர்ப்பு - என்ன காரணம்?

Italy Marriage Amazon Jeff Bezos
By Sumathi a month ago
Report

உலக பணக்காரர் ஜெஃப் பெசோஸின் திருமணத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜெஃப் திருமணம்

அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெசோஸ்(61). 19 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர். இவருக்கும் இவரது காதலியான பத்திரிகையாளர் லாரன் சான்சேவிற்கும் ஜுன் 24 முதல் 28ம் தேதி வரை இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.

jeff bezos with lover

இதற்காக அங்குள்ள SAN GIOGIO MARGGIORE தீவையே அவர்கள் முழுமையாக வாடகைக்கு எடுத்துள்ளனர்.தங்குவதற்காக வெனிஸ் நகரத்தில் உள்ள 5 ஆடம்பர விடுதிகள் முழுமையாக புக் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து தீவுக்கு செல்ல ஏதுவாக அனைத்து வாட்டர் டேக்சிகளையும் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

55 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வெளி உலக சந்திப்பு - அறியப்படாத மர்மம்!

55 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வெளி உலக சந்திப்பு - அறியப்படாத மர்மம்!

 மக்கள் எதிர்ப்பு

இந்த திருமணம் பெசோசுக்கு சொந்தமான KORU என்ற 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 417 அடி நீளம் கொண்ட படகில் நடைபெற இருக்கிறது. சுமார் 100 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிஅலியில், இந்த திருமணத்திற்காக சுமார் ஒரு வார காலத்திற்கு SAN GIOGIO MARGGIORE தீவே ஸ்தம்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலக பணக்காரர் ஜெஃப் திருமணத்துக்கு மக்கள் எதிர்ப்பு - என்ன காரணம்? | Venice Protest Against Amazon Jeff Bezos Wedding

இது தங்களை இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என வெனிஸ் நகர வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்நகரம் முழுவதும் பெசோசுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஆனால், பெசோனின் திருமணம் அங்கு நடப்பதற்கு வெனிஸ் மேயர் Luigi Brugnaro, ஆதரவு தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.