தம்பதிகள் 2-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற அனுமதி - எங்கு தெரியுமா?
தம்பதிகள் 2-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிறப்பு விகிதம்
வியட்நாம் அரசு அதன் நீண்டகால கொள்கையான இரண்டு குழந்தை பெற்றுக்கொள்வதை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. 1988ஆம் ஆண்டில், தம்பதிகள் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை நாடு நிறுத்தியது.
தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்த பிறப்பு விகிதங்களை நாடு எதிர்கொண்டு வருகிறது.
அரசு அனுமதி
மேலும் பிறப்பு விகிதம் 2022ஆம் ஆண்டில் கணிசமாகக் குறைந்த நிலையில், 2023ஆம் ஆண்டிலும் அது குறைந்துள்ளது. இதற்குக் காரணம் நகரமயமாக்கப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக வளர்ந்த பகுதிகளாக,
ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரம் போன்ற முக்கிய நகரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.