வேங்கைவயல் கிராமம் - தேர்தலை புறக்கணிக்கிறோம்..அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்

Tamil nadu Pudukkottai Lok Sabha Election 2024
By Karthick Apr 15, 2024 07:19 AM GMT
Report

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக வேங்கைவயல் கிராம மக்கள் பேனர் வைத்துள்ளனர்.

வேங்கைவயல் சம்பவம்

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் முடிவு கிடைத்தபாடில்லை. ,மக்கள் தொடர்ந்து இது குறித்து பல கட்ட போராட்டங்களையும், வலியுறுத்தல்களையும் அரசிடம் தொடர்ந்து வைத்து வருகின்றது.

vengaivayal-to-boycott-elections

தற்போது சிபிசிஐடி போலீஸார் இந்த வழங்கை விசாரித்து வருகின்றனர். இதுவரையில் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது கண்டறியப்படவில்லை என்ற காரணத்தால், கிராமத்தில் வசிக்கும் இரு சமூகங்களுக்கு இடையேயான பிரச்சினையாக இது மாறியது.

ஆட்டுக்குட்டிக்கு ஒரு மரியாதை உண்டு - அண்ணாமலையை அப்படி சொல்லாதீங்க - சினேகன் அதிரடி

ஆட்டுக்குட்டிக்கு ஒரு மரியாதை உண்டு - அண்ணாமலையை அப்படி சொல்லாதீங்க - சினேகன் அதிரடி

புறக்கணிப்பு

இறையூர் மற்றும் வேங்கைவயல் கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தல்களை வைத்து வரும் சூழலில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில காலத்தில், இறையூர் மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

vengaivayal-to-boycott-elections

தேர்தல் நெருங்கியிருக்கும் சூழலில், இதே முன்னெடுப்பை கையிலெடுத்து பேனர் ஒன்று வேங்கைவயல் கிராமம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் புறக்கணிப்பு செய்தி வெளியான நிலையில், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.