தமிழ்நாடு பெயரையே தூக்கி எறிகிறார்.. கவர்னர் நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை - சட்டசபையில் ஆவேசம்!

DMK R. N. Ravi
By Vinothini Nov 18, 2023 08:28 AM GMT
Report

சட்டசபையில் ஆளும் கட்சியினர் ஆளுநர் குறித்து பேசியுள்ளனர்.

தீர்மானம்

கவர்னர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து இன்று சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் பேசினார். அதில் அவர், "இந்த 10 மசோதாவை ஆய்வு செய்து நிறைவேற்றப்பட வேண்டும்.

velmurugan-said-governor-has-to-leave-tamilnadu

இந்த மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எமது கட்சியின் சார்பிலும் மக்களின் சார்பிலும், ஜனநாயக மக்களின் சார்பிலும், இந்திய அரசியலமைப்பு சட்டங்களை ஏற்றுக்கொண்டு நடக்கும் மக்களின் சார்பிலும் கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் - மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் லிஸ்ட் இதோ..

சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் - மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் லிஸ்ட் இதோ..

ஆவேசம்

இதனை தொடர்ந்து, அவர் கூறுகையில், "தமிழ்நாடு என்ற பெயரை தூக்கி எறிகிறார். தமிழ்நாடு தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி என்றால் கசக்கிறது. சமூக நீதி என்ற வரியை படிக்க மறுக்கிறார். உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகு அவர் திருப்பி அனுப்பி உள்ளார். முதல்வரால் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாக்கள் மக்களுக்கானது. மண்ணுக்கானது.

velmurugan-said-governor-has-to-leave-tamilnadu

குறிப்பாக கல்வி, ஆராய்ச்சி, மருத்துவமனை போன்ற சட்டங்களை எந்த காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் ஆளுநர் திருப்பி அனுப்புகிறார் என்பதை நாடே அறியும். இந்த 10 மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதால் ஆளுநருக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியில்லை.

ஆளுநர் ஆர்என் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை" என்று காட்டத்துடன் பேசியுள்ளார்.