நெருங்கும் சட்டசபை தேர்தல் - காங்கிரசிலிருந்து விலகி ஆளும் கட்சியில் இணைந்த மூத்த தலைவர்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஸ்ரவந்தி நேற்று அக்கட்சியில் இருந்து விலகி, ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியில் இன்று இணைந்தார்.
ஸ்ரவந்தி
தெலுங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில்பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஸ்ரவந்தி நேற்று அக்கட்சியில் இருந்து விலகி, ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியில் இன்று இணைந்தார்.
குற்றச்சாட்டு
அவர் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். மேலும் காங்கிரஸ் கட்சி ஒருவரின் தலைமையின் கீழ் செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அக்கட்சியில் இருந்து விலகியது பின்னடைவாகக் கருதப்படுகிறது.