சிறுமியை கர்ப்பமாக்கிய ராணுவ வீரர் - அதிர்ச்சி சம்பவம்
ராணுவ வீரர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
வேலூர், கே.வி.குப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் 17 வயது சிறுமி. அதே பகுதியில் வசிக்கும் மோகந்தாஸ்(23) என்ற இளைஞர் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த இளைஞர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியில் இதுகுறித்து விசாரித்த போது சிறுமி இளைஞருடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது.
தீவிர விசாரணை
இந்நிலையில் இளைஞர் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது அசாம் மாநிலத்தில் ராணுவ பயிற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் நிர்மலா அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.