வேளாங்கண்ணி திருவிழா - தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு 200 க்கும் மேற்பட்ட விடுதிகளில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுப்பட்டுள்ளனர்.
வேளாங்கண்ணி திருவிழா
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா வருகின்ற 29 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் வேளாங்கண்ணியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். விடுதிகளில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பு கருவிகள் சரியாக செயல்படுகிறதா என்றும்,
ஏற்பாடுகள் தயார்
விடுதி சமயற்கூடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலிண்டர் இணைப்புகளின் தரம் குறித்தும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொருத்தப்பட்டுள்ள
மோனோ அமோனியம் சல்பேட் கருவியை ஆபத்து காலங்களில் எப்படி இயக்குவது குறித்தும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி திருவிழா தொடங்க இருப்பதால் தீயணைப்புத்துறை சார்பாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விழா நாட்களில் வேளாங்கண்ணி கடற்கரையில் பொதுமக்கள், பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 இடங்களுக்கு மேல் மருத்துவ முகாம்கள், கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த உள்ளனர். அனைத்து உணவு விடுதிகளை உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்துள்ளனர்.