இனி பெட்ரோல் போடவும் இன்சூரன்ஸ் கட்டாயம் - அரசின் புதிய திட்டம்

Government Of India India
By Karthikraja Jan 27, 2025 04:30 PM GMT
Report

 வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பவும் காப்பீடு கட்டாயமாக்கபடும் திட்டத்தை அமல்படுத்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

வாகன காப்பீடு

இந்தியாவில் 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டப்படி கார் பைக் போன்ற அனைத்து வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு (3rd Party Insurance) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

insurance mandatory for buy petrol

இந்த மூன்றாம் நபர் காப்பீடு மூலம் எதிர்பாராத விபத்து ஏற்படும் போது பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு கிடைக்க வழிவகுக்கிறது. வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு பெற தவறுபவர்களுக்கு அபராதமும், 3மாத சிறைத்தண்டனையும் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. 

இனி ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது - அரசின் புதிய உத்தரவு

இனி ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது - அரசின் புதிய உத்தரவு

காப்பீடு கட்டாயம்

ஆனால் இந்தியாவில் 40 கோடி வாகனங்கள் உள்ள நிலையில் அதில் 50% வாகனங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு செய்வதை கட்டாயமாக்க மத்திய நிதி அமைச்சகம் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. 

insurance mandatory for buy petrol

இதன்படி, வாகனங்களுக்கு பெட்ரோல்/டீசல் நிரப்ப, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க, fastag பெறுவது போன்ற செயல்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. மேலும், காப்பீடு செய்யப்படாத வாகன உரிமையாளர்களுக்கு SMS அரசாங்கம் அனுப்பி நினைவூட்டப்படும்.

இந்த செயல்முறையை எளிதாக்க காப்பீட்டு சரிபார்ப்பை வாகனம் தொடர்பான டிஜிட்டல் சேவைகளுடன் இணைக்கப்படும். இந்த பரிந்துரைகளை ஆய்ந்து வரும் அரசு, இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.